90 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை..!
90 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த பண்டி குளம் கிராமத்தை சேர்ந்தவர் சபரி முத்து.
இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தூர்வாரும் பணிக்காக சேமதுரை என்பவர் கிணற்றில் இறங்கியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் ஆழமான பகுதியில் விழுந்துள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் நீரில் தத்தளித்து கூச்சலிட்டுள்ளார். இதைப் பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த சேமதுரையை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.






