--- --:--:-- --

உள்புறமாக தாழிட்டுக் கொண்டு தவித்த குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்..!

5

ரூரில் வீட்டு அறையில் உள்புறமாக தாழிட்டுக் கொண்டு மாட்டிக்கொண்ட தவித்த குழந்தையை தீயணைப்புத்துறை வீரர்கள் சாமர்த்தியமாக மீட்டனர். கரூரை அடுத்த காளியப்பன் ஊராட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்.

 

இவரது உறவினரான சிவன் என்பவர் தீபாவளியையொட்டி ரகுநாதன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சிவச்சந்திரனின் ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையின் உள்பகுதியில் தானாகவே தாழிட்டு மாட்டிக்கொண்டான்.

 

வீட்டின் உள்புற அறையில் மாட்டிக்கொண்டு தவித்த குழந்தை கதறி அழுததை கண்டு பெற்றோர் செய்வதறியாமல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் உள்புற அறையில் தாழிட்டுக் கொண்ட குழந்தையை மீட்டனர். சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி குழந்தையை மீட்டெடுத்த தீயணைப்புத்துறையினருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon