--- --:--:-- --

ஆர்யன் கான் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு..!

6

ர்யன்கான் வழக்கில் சர்ச்சை அதிகாரி சமீர் நீக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2ஆம் தேதி மும்பை கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர்.

 

அப்போது போதை விருந்தில் பங்கேற்றதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் மீது சமீர் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இதை மறுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இந்த வழக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாக்கங்கள் இருப்பதால் டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிகாரிகள் அவர்களின் தற்போதைய பணியில் இருந்து நீக்கப்பட வில்லை என்றும் ஏதேனும் குறிப்பிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை அவர்கள் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உதவுவார்கள் என்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

Right Menu Icon