திரைப்படமாகும் ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம்
ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டதில் கைதான 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தை திஷா என்ற பெயரில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா திரைப்படமாக எடுக்க உள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தனிமையில் வந்த கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை திசா என்ற பெயரில் ராம்கோபால்வர்மா திரைப்படமாக எடுக்க உள்ளார். டுவிட்டர் பதிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ள திஷா படம் நிர்பயா கொலை போன்ற பாலியல் பலாத்கார கொலைகளுக்கு பின் இருக்கும் உண்மையை பேசும் என குறிப்பிட்டுள்ளார்.






