வரும் 10ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம்..!
தமிழ்நாடு முழுவதும் வரும் பத்தாம் தேதி 30 ஆயிரம் மையங்களில் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
கொரொனா தொற்றின் இரண்டாம் அலை உச்சம் தொட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நான்கு கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வரும் ஞாயிறன்று தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுடன் தெரிவித்திருக்கிறார்.







