கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுல்தான்பேட்டையில் மொத்த வியாபாரம் செய்து வந்த சையத் என்பவருக்கு தொழில் நஷ்டம் காரணமாக கடன்சுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று இரவு மனைவி பாத்திமா மற்றும் மகன் பரக்கத்துக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.
தகவல் அறிந்த உறவினர்கள் 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா மற்றும் பரக்கத் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள சையத் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







