மின்னல் வேகத்தில் வந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்த பெண் போலீஸ்..!
மெக்சிகோவில் பெண் ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூவர் ஒரே மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக தப்பிச் சென்றனர். அப்பொழுது பெண் போலீஸ் ஒருவர் தனி ஆளாக சென்று வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்தார்.
அப்பொழுது மோட்டார் சைக்கிள் வந்து கொள்ளையர்கள் தரையில் விழுந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர். பெண் போலீசாருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது.






