மருத்துவர் அனுமதி இன்றி வெளியே போகக் கூறிய செவிலியர்..!
சிவகங்கையில் பக்கத்து வீட்டுக்காரர்களால் தாக்கப்பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கம்புகுடி கிராமத்தை சேர்ந்த 65 வயதான மூதாட்டி காந்திமதி.
இவருக்கு இவரது வீட்டின் அருகே ரவி என்பவருக்கும் மேற்பட்ட தகராறில் ரவி மற்றும் அவரது சகோதரராகிய இருவரும் சேர்ந்து இதனால் பலத்த காயமடைந்த நிலையில் மூதாட்டி காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செவிலியர் என்பவர் மூதாட்டியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு செல்ல வற்புறுத்தியுள்ளார்.
பின்னர் இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மருத்துவர் அனுமதியின்றி செவிலியர் தன்னிச்சையாக செயல்பட்டு மூதாட்டியை வெளியேற்றிய கண்டறிந்து செவிலியர் அனுசியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்.






