--- --:--:-- --

எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கிய மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட தந்தை..!

24

ர்நாடகாவில் ஆற்றில் மூழ்கி இருந்த மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றி தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடப்பா பகுதியை சேர்ந்த ஜெயராம் கவுடா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனியார் ஹோட்டலில் புதுவருட கொண்டாட்டங்களுக்காக சென்றுள்ளார்.

 

அன்று மாலை குடும்பத்தோடு ஆற்றில் குதித்துள்ளார். அப்போது கடலில் திடீரென அதிகமாக அலை வந்ததால் அனைவரும் நீரில் மூழ்கி ஆரம்பித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அங்கு சென்று அனைவரையும் மீட்க முயற்சித்தனர்.

 

தன் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி தாக்கு பிடித்து வந்த அவர் கரை சேர்ந்ததும் உயிரிழந்தார். மனைவி மற்றும் குழந்தைகளை ஜெயராம் கரை சேர்க்கும் வீடியோ காட்சி வைரல் ஆகியுள்ளது. தனது குடும்பத்தினரை காப்பாற்றிவிட்டு அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Right Menu Icon