மெல்லிய குச்சி மூலம் 1 நிமிடத்தில் 40 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை..!
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மெல்லிய கூர்மையான குச்சி மூலம் ஒரு நிமிடத்திற்குள் நாற்பது பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இட்டாகோ மாகாணத்தை சேர்ந்த டேவிட் ரஸ் என்பவர் ஏற்கனவே ஒருமுறை மெல்லிய கூர்மையான குச்சி மூலம் ஒரு நிமிடத்திற்குள் 28 பலூன்களை உடைத்து இருந்தார். அந்த சாதனையை சமீபத்தில் நியூயார்க்கை சேர்ந்த ஹஸ்லீட்டா பர்மான் என்பவர் முறியடித்தார்.
அவர் ஒரு நிமிடத்தில் மெல்லிய குச்சி மூலம் 36 பலூன்களை உடைத்து சாதனை படைத்தார். அந்த சாதனை மீண்டும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. டேவிட் ரஷ் ஒரு நிமிடத்தில் 40 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு குச்சி மூலம் ஒரு பலூனை உடைக்க வேண்டும் என்பதே விதியாகும்.







