--- --:--:-- --

திருவாடானை, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது

9db353a3-4827-410e-819f-938fb7b96e44

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாடானையில் நடைபெற்றது.

 

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஒன்றியத்தில் 4 உழவர் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. 100 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் பெரும்பாலான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

விவசாயிகள் தங்களது விவசாய நிலங்லங்களில், விவசாயத்தை உரிய காலத்திற்குள் செய்ய ஏதுவாக பண்னை பொருட்களை வழங்க ஒரு சங்கத்திற்கு தலா ரூ.5 லட்சத்தை முதலீடாக அரசு வழங்குகிறது. உழவர் உற்பத்தியாளர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் விவசாயத்திற்கு தேவையான பண்ணை பொருட்களை வாங்கிக்கொண்டு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

அதன்படி இன்று திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயத்திற்கு தேவையான டிராக்டர் மூன்றினை விவசாய துணை இயக்குனர் கன்னையா தலைமையில், விவசாய உதவி இயக்குநர் கருப்பையா முன்னிலையில் டிநாகனி, தேளூர், கொடிப்பங்கு கிராமங்களின் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது. உடன் ஏராளாமான விவசாயிகள் மற்றும் விவசாயதுறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon