--- --:--:-- --

வேலையில்லாமல் பரிதவிக்கும் பந்தல், ஒலி, ஓளி அமைப்பாளர்கள்! அனுமதி வழங்க அரசுக்கு கோரிக்கை!!

bea481d9-686b-4b03-bc4e-fd8176f72db0

கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு நீடித்துவரும் நிலையில் வேலையில்லாமல் பரிதவிக்கும் பந்தல், ஒலி, ஓளி அமைப்பாளர்கள் வருமானமின்றி வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் தங்களின் தொழில்களை நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

 

சிவகங்கை நகரில் புத்தர் தெருவில் ஒலி,ஓளி மற்றும் பந்தல் அமைப்பாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது நீடிக்கும் ஊரடங்கு உத்தரவால், கடந்த கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறாததாலும், அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள், நடைபெறாததாலும் இவர்களின் பணிகள் முற்றிலும் முடங்கிபோயுள்ளது. இதனால் இவர்களது குடும்பத்தினர் வருமானமின்றி பட்டினியில் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஒலி, ஓளி மற்றும் பந்தல் அமைப்பாளர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ஊரடங்கு நீட்டித்துள்ள நிலையில், பல தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்ளுக்கும் அனுமதி வழங்காதது வேதனை அளிக்கிறது. முறையாக அமைப்பு சாரா தொழிலாளர்களாக பதிவு செய்யாததால், எந்த ஒரு அரசு நிவாரணமும் கிடைக்க பெறாமல் அவதியடைந்து வருகிறோம்.

 

எனவே தமிழக அரசு வருமானமின்றி பசியால் வாடும் ஒலி, ஓளி மற்றும் பந்தல் அமைப்பாளர்களுக்கு தங்களது தொழில்களை நடத்திட அனுமதி வழங்கிடவும், நிவாரண உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon