--- --:--:-- --

பிரபல இயக்குநர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

1

பிரபல மூத்த இயக்குநர் ஓம் சக்தி ஜெகதீசன் அவரது 95 வயதில் காலமானார். தமிழில், ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி’, ‘சமயபுரத்தாளே சாட்சி’, ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’, ‘பதில் சொல்வாள் பத்ரகாளி’, ‘கைகொடுப்பாள் கற்பகாம்பாள்’, ‘ஒரே தாய் ஒரே குலம்’, ‘இவர்கள் இந்தியர்கள்’, ‘திசை மாறிய பறவைகள்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

 

எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படத்துக்கு வசனம் எழுதியுள்ள இவர், பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில், ‘சிரஞ்சீவி’ என்ற படத்தின் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

 

ஓம் சக்தி ஜெகதீசனின் இறுதிச் சடங்கு நேற்று போரூரில் நடந்த நிலையில் அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon