--- --:--:-- --

பேக்கரி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்.. வெளியான சிசிடிவி காட்சி..!

2

ழனி அருகே பேக்கரியில் வேலை செய்யும் இளைஞரை மதுபோதையில் 3 பேர் தாக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் மேல் கரைகட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் பேக்கரியில் இரவில் மூன்று இளைஞர்கள் புகுந்தனர். தடதடவென உள்ளே சென்று அவர்கள் கடையில் வேலை செய்யும் அரவிந்த்சாமி என்ற ஊழியரை தாக்கி காயப்படுத்தினர்.

 

மேலும் இளைஞர்களும் மூன்று பேர் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து தகராறில் ஈடுபட்டனர். காவல் நிலையத்திற்கு அரவிந்த்சாமி தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் வருவதற்குள் தகராறில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினார்.

 

முதற்கட்ட விசாரணையில் இளைஞர்கள் மூன்று பேரும் கல் துரை கிராமத்தைச் சேர்ந்த விஜய், கவின், கார்த்தி என தெரியவந்துள்ளது. மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon