--- --:--:-- --

ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்து விபத்து..!

8

ஞ்சை அருகே ஓட்டுநருக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டதால் அரசு பேருந்து விபத்தில் சிக்கியது. கும்பகோணத்தில் இருந்து அரசு பேருந்து அணைக்கரை வழியாக விருத்தாச்சலம் சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது ஓட்டுநர் நடராஜனுக்கு தீடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பாலம் அருகே சாலையில் கொட்டிக்கிடந்த ஜல்லியில் மோதியதில் பயணிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon