வெயில் தாங்காமல் உயிரிழந்த ஓட்டுநர்..!
மதுரையில் வெயிலின் தாக்கத்தால் கனரக லாரி ஓட்டுநர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் இணைந்திருக்கிறது. கேரள மாநிலம் புது வேலி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.
கனரக லாரி ஓட்டுனரான இவர் மேலூர் அருகே மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓய்வறை ஒன்றில் ஓய்வெடுத்து இருக்கிறார். மாலை நேரத்தில் உடன் இருந்தவர்கள் அவரை எழுப்பியுள்ளனர். ராஜேஷ்குமார் ஆசை வச்சு கிடந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்ததில் லாரி ஓட்டுனர் ராஜேஷ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. கடும் வெயில் நிலவ தரையில் எந்தவித விரிப்பும் இன்றி படுத்து உறங்கியதால் வெயிலின் தாக்கத்தால் வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





