--- --:--:-- --

சிறுவனின் உயிரை பறித்த ட்ராகன்! உறவினர் கதறல்

Untitled-1 copy

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டது. அதே பகுதியைச்சேர்ந்த பார்த்திபன் என்பவர் தான் இந்த பொருட்காட்சியை நடத்தியவர். ரம்ஜானை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த பொருட்காட்சிக்கு வாணியம்பாடி காவாக்கரையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணு நேற்று இரவு சென்றான். ட்ராகன் ரயிலில் ஏறுவதற்கு ஆசைப்பட்ட அவன் அதற்கான டிக்கெட்டை வாங்கிக்கொண்டு படிக்கட்டில் ஏறி நின்றுள்ளான்.

 

அப்போது படிக்கட்டில் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்படவில்லை. ஆர்வத்தில் மிக அருகே சென்ற விஷ்ணு வேகமாக இயங்கி கொண்டிருந்த ட்ராகன் ரயில் மோதி சக்கரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டான். இதில் அவனுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.அங்கிருந்தவர்கள் விஷ்ணுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஷ்ணு உயிரிழந்தான்.சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு அவனது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

இந்த பொருட்காட்சியானது உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாலேயே விபத்து நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மின்சார வையர்கள் மிகவும் ஆபத்தான முறையில் தரையில் போடபட்டிருந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. பொருட்காட்சி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம்,தீயணைப்பு துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொலை தொடர்பு என பல்வேறு துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் பொருட்காட்சியை நடத்த உரிமம் பெற்றிருக்க வேண்டிய பார்த்திபன் எங்குமே அனுமதி பெறவில்லை. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். ட்ராகன் ரயிலின் உரிமையாளரான மனோகரன் என்பவரை வாணியம்பாடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon