--- --:--:-- --

மாத்திரைக்குள் இருந்த பின்… அதிர்ச்சியில் நோயாளிகள்

d64dc2df-37e0-4b54-943e-392ef6a28c8a

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்று வலிக்காக சிகிச்சை பெற ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு சிப்ரோ பிராக்சிசின் மாத்திரை கொடுக்கபட்டது. அந்த மாத்திரையானதை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பயோ ஜெனிட்டிக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கபட்டதாகும். மாத்திரையை இரண்டாக உடைத்து பாதியாக உட்கொள்ளுமாறு செவிலியர்கள் கூறியுள்ளனர்.

 

இதனையடுத்து சக்தி என்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை பாதியாக உடைக்க முற்பட்டபோது மாத்திரை வளைந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த சக்தி அதனை உடைத்தபோது உள்ளே பின் போன்ற கம்பி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாண்டி என்பவருக்கும் கொடுக்கப்பட்ட சிப்ரோ பிராக்சிசின் மாத்திரையை உடைத்த போது அதற்க்குள்ளும் கம்பி இருந்தது.

இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது தெரியாமல் கம்பி விழுந்து இருக்ககூடும் என்று அலட்சியமாக பதில் சொன்னதாகவும், வேறு மாத்திரை வாங்கி கொள்ளுமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாத்திரையை இரண்டாக உடைத்ததால் தாங்கள் தப்பித்ததாகவும் உடைக்காமல் விழுங்கியிருந்தால் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்று சக்தியும் பாண்டியும் தெரிவித்தனர். எனவே மாத்திரையை நான்காக உடைத்து பின்னரே விழுங்கியதாகவும் கூறினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon