--- --:--:-- --

ஹெட்போன் மற்றும் சார்ஜரை விழுங்கிய நாய்..!

3

ங்கிலாந்தில் நாய்குட்டி ஒன்று ஆப்பிள் ஹெட்போன் மற்றும் சார்ஜரை விழுங்கிய நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை மீட்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் வசித்து வரும் பெண் நாய்கள் மேல் அலாதி பிரியம் கொண்ட நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.

 

ரேச்சலின் செல்ல நாய்க்குட்டி ஹெட்போன் மற்றும் சார்ஜரை விழுங்கியுள்ளது. இதனால் பதறிப்போன ரேச்சல் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். உடனடியாக மருத்துவர்கள் ஜிம்மியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

 

அதில் ஹெட்போன் மற்றும் சார்ஜர் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஹெட்போன் மற்றும் சார்ஜரை அகற்றாவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் ஹெட் போனை எடுக்க திட்டமிட்டனர். இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலமாக ஹெட்போன் மற்றும் சார்ஜரை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon