எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்த நாய்..!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன் எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்து கொன்ற நாய் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நுரை தள்ளியபடி நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதன் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பெரும் சோகத்தில் மூழ்கியவர்கள் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.





