--- --:--:-- --

கொரோனாவிலிருந்து குடும்பத்தை காக்க காரையே வீடாக மாற்றிய மருத்துவர்

6

கொரொனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் தன் குடும்பத்தாரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தன் காரையே தற்காலிக வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும் அவர் சச்சின் நாயக் இவர் தனக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனைக்கு அருகே காரை நிறுத்தி அதிலேயே தற்காலிகமாக வசிக்கிறார்.

 

இதன்மூலம் குடும்பத்தினருக்கும் பிறருக்கும் பரவும் வாய்ப்பை தடுக்க முடியும் என அவர் கருதுகிறார். காருக்குள் இருந்தவாறு செல்போனில் குடும்பத்தாருடன் வீடியோவில் பேசுவது, புத்தகம் படிப்பது என பொழுதை கழித்து வருகிறார். சச்சின் பொறுப்புணர்வை முதலமைச்சர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon