--- --:--:-- --

தூய்மை பணியாளரை தாக்கிய மருத்துவர்..!

1

நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளரை மருத்துவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

தனியார் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் நல்லம்மாள் என்பவரை தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து மருத்துவர் ராஜ்குமாரிடம் கேட்டபோது மருத்துவ பணியில் பணியாற்றி வரும் நல்லம்மாள் என்ற தூய்மை பணியாளர் கழிவறைகளை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதாகவும் எச்ஐவி பாசிட்டிவ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரது குடும்ப சூழ்நிலை கருதி தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதோடு பணியும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

 

அவரை அடிக்க வேண்டும் என்ற எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் மருத்துவர் ராஜ்குமார் தெரிவித்தார். இதையடுத்து நல்லமானிடம் கேட்ட பொழுது சில தினங்களுக்கு முன்பு சரியாக பணி செய்யவில்லை என மருத்துவர் திட்டியதாகவும் பின்னர் மாலையே தன்னை பணிக்கு சேர்த்துக் கொண்டதாகவும் தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே மருத்துவர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon