ஆசிய விளையாட்டில் 8 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்..!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒரு தங்கம் உட்பட 8 பதக்கங்களை தமிழக வீரர்கள் நான்கு பேர் வசப்படுத்தினர்.
400 மீட்டர் தொலை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ராஜேஷ் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை திவ்யா டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தனர்.
வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு தலைமை சங்கம் சார்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





