நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்..!
விருதுநகர் மாவட்டத்தில் செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டார். சாத்தூரில் உள்ள கிருஷ்ணர் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரகுவீர் என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் செவிலியர் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவரை கைது செய்த போலீசார் மருத்துவமனை நிர்வாகி டாக்கர் கிருஷ்ணவேணி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





