உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த திமுக இளைஞரணி மாநாடு..!
திமுக மாநாட்டு அரங்கம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம் உலகில் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற பெயரை பெற்றுள்ளது.
இதன் மூலம் வோல்ட் ரெகார்ட் புத்தகத்தில் திமுக மாநாட்டு அரங்கம் இடம்பெற்றுள்ளது. 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் 45 நாட்களில் இந்த மாநாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டது.





