காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன்..!
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். கிராமத்தை சேர்ந்த இளைஞரும், ஒரு பெண்ணும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இருவருக்குமே அவரவர் பெற்றோர் வேறு இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இருவரும் காரில் வீடு திரும்பும் பொழுது இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மதியரசன் காருக்குள் வைத்து கத்தியால் காதலியின் கழுத்தை குத்தியதாக சொல்லப்படுகிறது. படுகாயமடைந்த காதலியை மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு சென்று அனுமதித்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.






