ஆக்ரோஷமாக துரத்திய முதலை.. தப்பிக்க ஓடிய ஊழியர்..!
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்களால் இணையம் நிரம்பி வருகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பதற்கு வசீகரமாகவும் பயமாகவும் இருக்கும். அப்படியான ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் முதலை ஒன்று அங்கிருக்கும் பூங்கா ஊழியர்களை துரத்தும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது. இந்த பூங்காவில் 110 ஏக்கரில் ஆயிரக்கணக்கான முதலைகள் வளர்க்கப்படுகின்றன. ராட்சத முதலைகள் இருக்கும் இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அது மட்டும் இல்லாமல் பூங்காவில் வரவேற்புடன் செல்லப்பிராணி பூங்கா ஆகியவற்றுடன் சுற்றுலா பயணிகளுக்காக கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதுபோல வீடியோவில் இருக்கும் ஒரு முதலை ஆக்ரோஷமாக ஒரு நபரை துரத்துகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.






