--- --:--:-- --

பாஜகவில் இணைகிறாரா முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி..!

8

திரிபுரா மாநிலத்தில் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில முதல்வர் மாணிக் சாகா தங்களுடைய நியமனம் மாநிலத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

கங்குலியை 2021 ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் பொழுது பாஜகவில் சேர்க்க பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.

 

இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலமான திரிபுராவின் விளம்பர தூதுவராக கங்குலி நியமிக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.

 

Right Menu Icon