பழத்தை எடுத்து வியாபாரியை முட்டிய பசு மாடு..
விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் பசு மாடு ஒன்று பழ வியாபாரியை முட்டி தள்ளிய வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைத்திருக்கிறது.
சாலையோரம் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பழ விற்பனை செய்து வந்த நிலையில் அந்த வழியாக வந்த பசு மாடு ஒன்று அவரின் வண்டியில் இருந்த பழத்தை எடுத்துள்ளது.
இதனை பார்த்த வியாபாரி அந்த மாட்டிடம் இருந்து பழத்தை பறிக்க முயன்ற பொழுது கோபமடைந்த அந்த மாடு அந்த வியாபாரியை கொம்பால் முட்டி தள்ளியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை அந்த பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது.






