--- --:--:-- --

மாலை போட்ட பள்ளி மாணவர்களை முட்டி போட வைத்த தலைமை ஆசிரியர்..!

4

நாமக்கல் அருகே பாதயாத்திரை செல்ல மாலை அணிந்து வந்த மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாக தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதி உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுப்பிரமணி என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தவர். தற்பொழுது மார்கழி மாதம் என்பதால் சபரிமலை மற்றும் பழனி மலைக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மாலை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

 

அதனை கண்ட தலைமை ஆசிரியர் சுப்பிரமணி அவர்களை வகுப்பறையில் முட்டி போட வைத்து அடித்து துன்புறுத்துவதாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனிடையே மாலை போட்டதால் மாணவர்கள் சரிவர பள்ளிக்கு வரவில்லை என்பதால் முட்டி போட வைத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon