--- --:--:-- --

சிறுமியை சித்திரவதை செய்த தம்பதி..!

2

ரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராமில் வீட்டு வேலை செய்து வந்த மைனர் சிறுமியை சித்திரைவதை செய்து பாலியல் டார்ச்சர் செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்டில் உள்ள ராம்சியை சேர்ந்த சிறுமி குருகுராமில் ஒரு தம்பதியின் வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

 

அந்த தம்பதி தினசரி அந்த சிறுமியை இரக்கமின்றி அடித்து துன்புறுத்தியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு கைகள் கால்கள் மற்றும் வாயில் பல காயங்கள் இருந்துள்ளன. வாய்ப்பகுதியில் பயங்கர வீக்கம் காணப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக குரு இராமில் நியூ காலனியில் வசிக்கும் மனிஷ் கட்டார், அவரது மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர தம்பதி சிறுமியை இரவில் கூட தூங்க விட மாட்டார்களாம். மேலும் சிறுமி சாப்பிடவும் உணவு கொடுக்க மாட்டார்களாம்.

 

சிறுமியின் வாய் பகுதி கடுமையான காயத்தால் வீங்கி இருந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அவர்கள் தன்னை அவமானப்படுத்துபவராகவும் இரும்பு கம்பி மூலம் சூடு வைத்ததாகவும் சிறுமி விசாரணையில் கூறியுள்ளார். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள தம்பதி மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon