ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப் பாறை ஈபிள் கோபுரத்தை விட உயரமாக உள்ளது..!
ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப் பாறை ஒன்றின் ஈபிள் கோபுரத்தை விட உயரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மேனியா தீவுக்கு அருகில் உள்ள கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப் பெரிய பவளப் பாறைத் திட்டுகள் குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது பவளப் பாறைகளில் ஒன்று ஆயிரத்து 600 அடி உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடலுக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் இந்த பவளப் பாறை பாரிசின் ஈஃபிள் கோபுரம், கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் கோபுரம், அமெரிக்காவில் எம்பையர் ஸ்டேட் கட்டடம் ஆகியவற்றை விட உயரமானது என்பது தெரியவந்துள்ளது.






