உயிரோடு இருக்கும் அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிமுக பிரமுகர் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளார். நெல்லையை சேர்ந்த சரவணன் என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டிருந்தார். சில மணி நேரங்களில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது.
தெரியாமல் தவறுதலாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டு விட்டதாகவும் பின்னர் உடனடியாக அதை நீக்கி விட்டதாகவும் சரவணன் தெரிவித்தார்.






