சென்னை மெட்ரோ பணியின் போது சாய்ந்த ராட்சத இயந்திரம்..!
சென்னை போரூரில் மெட்ரோ ரயில் பணியின் பொழுது ராட்சத இயந்திரம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
போரூர் சாலை மற்றும் ஆற்காடு சாலையில் துளையிடும் பணி 100 டன் எடை கொண்ட ராட்சதம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பொழுது இயந்திரம் மழை நீர் வடிகால் கால்வாயில் சிக்கி சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, வாகனம் மூலம் சாய்ந்து கிடந்த வாகனம் நிலை நிறுத்தப்பட்டது.






