முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்கை
மதுரையில் நடபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ தளபதியின் செயல் கண்டிக்கத்தக்கது.
கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, காங்கிரஸ் பேரியக்கத்தையும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுப்படுத்திப் பேசிய கோ. தளபதி மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.





