--- --:--:-- --

திமுக வார் ரூம் அலுவலகத்தில் ஆய்வு செய்த முதல்வர்..!

12

க்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுகவின் வார் ரூம் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை செய்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

 

மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்பொழுது அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உடன் இருந்தனர்.

 

Right Menu Icon