தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்..!
அனைத்துக் கட்சி கூட்டம்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து இன்று காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
முதலமைச்சருக்காக அமைதி காக்கிறோம்: காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.
களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம், அமைதி காக்கிறோம் என் எம்.பி. ஜோதிமணி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை கண்டனம்: கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ தளபதியின் பேச்சு தேவையற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் மற்றும் அதன் எம்.பி.க்களை இழிவுபடுத்திப் பேசிய எம்.எல்.ஏ மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.






