--- --:--:-- --

மாடனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவிப்பு..!

12

மெரிக்காவில் ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள நிலையில் மாடனா தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப் அமெரிக்காவில் ஏற்கனவே தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாடனா தடுப்பூசி தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்த மாடனா தடுப்பூசியை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார். முதற்கட்டமாக இந்த தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

முன்னதாக மாடனா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் தீவிரம் அடைவதைக் 100% தடுத்து பலன் தருவதாக ஆய்வில் தெரியவந்த தகவல்கள் வெளியாகின. எனவே தடுப்பு மருந்துக்கு அனுமதி கேட்டு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்‌டி‌ஐயிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

 

இந்த தடுப்பு மருந்தினை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம் எனவும் இந்திய ரூபாயில் மாடனா மருந்தின் ஒரு டோஸ் 1,500 ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon