சிக்னலில் முந்திச் செல்ல முயன்ற கார் பறந்து விழுந்து விபத்து..!
சீனாவில் போக்குவரத்து சிக்னலில் முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று பறந்து சென்று பல கார்கள் மீது விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. லியோனிங் மாகாணத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஏராளமான கார்கள் நின்று கொண்டிருந்தது.
அப்போது பச்சை விளக்கு ஒளிர்ந்ததும் கார் ஒன்று வேகமாக முந்திச் செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி காற்றில் பறந்து எதிரில் இருந்த சில கார்கள் மீது மோதி பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 5 கார்கள் பலத்த சேதமடைந்தன. ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.




