--- --:--:-- --

சமந்தாவுக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்குகள்..!

8

மிழர்களையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் தவறாக சித்தரிப்பதாக கூறி தி ஃபேமிலி மேன் இரண்டாவது பாகத்தை தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் தி ஃபேமிலி மேன் சீரிஸின் இரண்டாவது பாகம் 14 ஆம் தேதி வெளியாகிறது.

 

நடிகை சமந்தா ஈழத் தமிழ் பேசும் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையணிந்த பெண்ணாகவும் தற்கொலைப் படையை சேர்ந்தவராகவும் காட்டப்பட்டுள்ளார்.

 

இந்த வெப்சீரிசில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தி ஃபேமிலி மேன் சீரிசுக்கு எதிராகவும் சமந்தாவுக்கு எதிராகவும் ட்விட்டரில் ஃபேமிலி மேன் 2 எகைன்ஸ்ட் தமிழியன்ஸ் என்ற ஹேஸ்டெக் ட்ரெண்ட் ஆனது.

Leave a Reply

Right Menu Icon