--- --:--:-- --

நிலை தடுமாறி ஓடிய முதியவர் மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கிய பேருந்து..!

2

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கவனக்குறைவாக சாலையை கடந்த முதியவர் மீது மோதிய அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியாத்தத்தில் இருந்து கர்நாடக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

 

பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையின் பாதி தூரம் வரை கடந்து வந்துவிட்ட முதியவர் ஒருவர் திடீரென பேருந்தை பார்த்துவிட்டு பின்வாங்காமல் பதற்றத்தில் முன் நோக்கி ஓடினார். ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றார்.

 

முதியவர் மீது மோதிவிட்டு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. பேருந்து மோதியதில் முதியவர் படுகாயம் அடைந்த நிலையில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

 

Right Menu Icon