வெள்ளத்தில் சிக்கிய பேருந்து..திக் திக் காட்சிகள்..!
குஜராத் வெள்ளத்தில் தமிழகப் பயணிகள் சென்ற சொகுசு பேருந்து சிக்கிய நிலையில் அவர்கள் டிரக் மூலம் மீட்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த 55 பக்தர்கள் குஜராத் சென்ற நிலையில் பாபு நகர் பகுதியில் அவர்கள் பயணித்த சொகுசு பேருந்து தரைப் பாலத்தில் வெள்ளத்தில் சிக்கியது.
இது குறித்து அறிந்த மீட்பு குழுவினர் ஒரு ட்ரக் மூலம் சென்ற பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகள் அனைவரையும் மீட்டனர். ஆனால் அந்த ஒரு ட்ராக் வெள்ளத்தில் சிக்கி முன்னேற முடியாமல் நின்றதால் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு பேருந்தில் இருந்த அனைவரையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.





