--- --:--:-- --

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

8

செங்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் 43 வயது பெண் ஒருவர் தாய் மற்றும் தந்தையை இழந்து தனியாக வசித்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் இரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார்.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதித்த பொழுது உயிரிழந்த பெண்ணின் உடலில் ரத்த காயங்கள் அதிகமாக இருந்ததும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்தது.

 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon