மணமேடையிலேயே பரிசை தூக்கி எறிந்த மணமகள்..!
வட இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் எல்லாம் வித்தியாசமான சம்பவம் நடைபெற்று அனைவரின் கவனத்தையும் அந்த திருமணம் ஈர்த்து விடுகிறது. மணமேடையில் மணமகன் மணமகள் உட்கார்ந்து கொண்டிருக்க திருமண நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அப்போது மணமகனின் நண்பர்கள் ஒரு பரிசை மணமகளிடம் கொடுக்கின்றனர். அவளும் அந்த பரிசை வாங்கி ஆர்வமுடன் திறந்து பார்த்த அடுத்த வினாடி அதனை தூக்கி எறிகிறார். மணமகளின் இந்த கோபத்திற்கு காரணம் அந்த பரிசு அட்டையில் குழந்தைக்கு பாலூட்டுவது இருந்தது.
தான் வெட்கத்தில் கன்னம் சிவக்க மணமேடையில் இருக்க வேண்டிய மணமகளின் அழகு முகம் கோபத்தில் சிவந்த முகமாக மாறிய வீடியோ வைரலாகி வருகிறது.







