--- --:--:-- --

நீர்வீழ்ச்சியில் போட்டோ எடுத்த போது தவறி விழுந்து 7 நாட்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் உடல் மீட்பு..!

10

திண்டுக்கல் மாவட்டம் நீர்வீழ்ச்சியில் போட்டோ எடுத்த போது தவறி விழுந்து 7 நாட்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நீர்வீழ்ச்சிக்கு திண்டுக்கல் மட்டுமில்லாது மதுரை தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.

 

மலை பகுதியில் அதிக மழை பெய்ததால் நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் சென்றுள்ளார், போட்டோ எடுப்பதற்காக நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டில் நின்றுள்ளார்.

 

அப்பொழுது பசுபதி பாண்டியன் தவறி விழுந்ததில் 6 நாட்களாக 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தேடி வந்தனர். பாறையின் இடையே சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Right Menu Icon