விடுமுறை எடுப்பதற்கு வினோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்து காவலர்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் விடுமுறை எடுப்பதற்கு வினோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்து காவலர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த திலீப் குமார் அகர்வால் என்பவர் தனது மனைவியின் சகோதரனுடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் 11ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் விடுமுறை கேட்டு மேல் அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தார்.
அந்த திருமணத்தில் கலந்து கொள்ளாவிட்டால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மனைவி மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் அவருக்கு விடுமுறை அளிக்காத மாநில காவல்துறை தலைமை இயக்குனர் வேறு இடத்துக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.







