மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டிக் கொலை..!
திண்டுக்கல் அருகே மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரையை அடுத்த முல்லாம்பட்டி காலனியில் வசித்த 55 வயது பொன்னுபாப்பா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் அவரது மகள் பூங்கொடி கடந்த சில மாதங்களாக தாயாரை உடனிருந்து கவனித்து வந்தார். பூங்கொடியை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த அவரது கணவர் கனகராஜ்க்கும், பொண்ணு பாப்பாவுக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கொலையில் முடிந்தது. கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.







