திருமணத்தின் அடிப்படையான நோக்கம் இன்பத்திற்கு மட்டும் அல்ல..!
திருமணத்தின் அடிப்படையான நோக்கம் சந்ததியை உருவாக்குவது தானே தவிர இன்பத்திற்கு மட்டும் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கணவனை விட்டுப் பிரிந்த மனைவி தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி குழந்தைகளை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி வழக்கு தொடரும். இதுபோன்ற தம்பதிகளால் குழந்தைகள் தீய உலகிற்குள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார்.
குழந்தைகளை தாயிடம் இருந்து பிரிப்பது அவர்களை துன்புறுத்தும் செயலாகும் என்று கூறிய நீதிபதி இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் தீங்கு விளைவிப்பதாகும் என்றார். சம்பந்தப்பட்ட இரு குழந்தைகளையும் தாயும் தற்காலிக கட்டுப்பாட்டில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





