--- --:--:-- --

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!

2

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கையிருப்பில் இருக்கும் மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

 

அதனால் மாதந்தோறும் நோயாளிகளுக்கு வழங்கி வந்த இலவச மாத்திரைகள் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அதில் கிடைக்கும் மாத்திரைகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய மருந்தை பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளுமாறு தனி சீட்டில் எழுதிக் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon