--- --:--:-- --

சிக்கன் தர முடியாததால் ஓனரை கொடூரமாக தாக்கிய ஆசாமி..!

8

சென்னை அம்பத்தூரில் இலவசமாக சிக்கன் பக்கோடா தர மறுத்த கடைக்காரரை இளைஞர் ஒருவர் மதுபோதையில் தாக்கும் வீடியோ வைரலாகி பரவி வருகிறது.

 

தன் மாமனார் உடன் சேர்ந்து சிக்கன் பக்கோடா கடை நடத்தி வரும் நிலையில் அவரிடம் அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் இலவசமாக சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்திருக்கிறார். இந்த தகராறில் சிவாவை இளைஞர் மரப்பலகையால் தாக்கியது பரபரப்பு ஏற்படுத்தியது.

 

படுகாயம் அடைந்த சிவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவரை தாக்கிய இளைஞர் உதயகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Right Menu Icon